கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 December, 2010

நாஙகளும் சொல்லுவோம்ல...

அன்பார்ந்த வாசக பெருமக்களே உங்களுக்கு விதை வீதியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...















உலகத் தமிழர்களே..
என்றும் இணைந்திருப்போம்...
இந்த கவிதை வீதி நீங்கள் வளம் வரவே...!

சங்கடம்


வணக்கமிட்டு புன்னகையிட்டார்
பழைய நண்பர் ஒருவர்
 
கவர்ச்சிப் புன்னகையால்
நானும் கை குலுக்கி ஆயிற்று...
தேனீர் பருக நான் அ‌ழைக்க
‌வேண்டாம் என அவர் மறுக்க
சம்பிரதாய வார்த்தை பரிமாற்றங்கள் 
முடிந்தது...

கடைசியாய்
பார்த்த நாளிலிருந்து
இன்று வரையிலான சில சம்பவங்கள்
தொகுப்புகளை அவர் சொல்ல
கடமைக்காய் 

நான் கேட்டுக்கொண்டிருந்தேன்...

”அப்புறம்”
என்கிற வார்த்தையால்
அவர் விடைபெற
 

”சரி” என்கிற வார்த்தையால்
நானும் வழியனுப்புகி‌றேன்...
 

பள்ளி பருவத்தில்
படித்த நாள் முதல்
கல்லூரி காலத்தில்
கலந்த நாள் முதல்

ஆயிரம் தொடர்புகள்
எங்களுக்குள் இருந்தாலும்

தற்போது என் மனத்திரையில்
ஓடிக்‌கொண்டிருப்பது
அவசரத்திற்காய் வாங்கிய கடனை
அவர் மறந்து ‌போன 
சம்பவம் தான் ....!

30 December, 2010

பருவக் காலம்

மனதுக்குள் புயல்...

இதயத்தில் இடி...

மூளையில் மின்னல்...

கண்களில் மழை...
 
புயல்,  இடி, மின்னல். ம‌ழை

சரியில்லை 
என் பருவக்காலங்கள்...


பத்துக்கு பத்து - தமிழ் சினிமா இந்தவாரம் (டிச 25-30)

சினிமாவுக்கு முழுக்கு - அஜீத்



அரசியல் விஷயத்தில் கிட்டத்தட்ட இறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் அஜீத் என்றே தோன்றுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து பகிரங்கமாக பேசி வருகிறார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு, அரசியலில் குதிக்கும் முடிவில் அவர் உறுதியாக உள்ளார் என்கிறார்கள.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக பணியாற்றப் போவதாகவும், தனது செயல்திறன் பார்த்து பதவி கொடுத்தால் போதும் என்றும் கூறியிருந்தார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 

“எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும்,  நாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்.

காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால்… எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம்.

அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்‌டேன். எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன்”, என்று கூறியுள்ளார்.

***********************************************************************************************************************
சிக்கல் மேல சிக்கல்

விஜயின் 'காவலன்' படம் ஆரம்பித்ததில் இருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. முதலில் படத்தின் தலைப்பில் ஆரம்பித்த சிக்கல், விஜய்க்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் திரண்டது, கனடாவில் வாழும் இலங்கை தமிழகர்கள் விஜய் படத்தை புறக்கணிப்போம் என்று அறிக்கை விடுத்தது என உருவான பல சிக்கல்களை தொடர்ந்து, தற்போது படம் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம், இப்படத்தை பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு முழுக்க 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறிவருகிறார். ஆனால் இதுவரை 70 திரையரங்குகள் மட்டுமே இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கும் விஜய்க்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். 'சுறா' படத்தின் தோல்வியின் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் விஜயிடம் கேட்ட நஷ்டஈடு கேட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நடிகர் சங்கமும் தலையிட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அதில் திரையரங்க உரிமையாளர்களுக்கு சாதகமாக எந்த முடிவும் எடுக்கப்படாததால் 'காவலன்' படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொங்களுக்கு வெளியாகும் 'ஆடுகளம்', 'சிறுத்தை', 'இளைஞன்' போன்ற படங்களுக்கு கனிசமான எண்ணிக்கையில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறிய பட்ஜெட், புதுமுக நடிகர்களின் படங்களுக்குத்தான் திரையரங்குகள் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் தற்போது விஜய்போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

'காவலன்' டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜயை கடவுள் என்று வர்ணித்த ஷக்தி சிதம்பரத்திற்கு நல்ல அருளை தருவாரா விஜய் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

***********************************************************************************************************************
முடிகிறது ஒரு கதை

நயன்தாரா விவகாரத்தால் சண்டைபோட்டுக் கொண்டிருந்த பிரபுதேவா-ரம்லத் தம்பதியினரின் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. பிரபு தேவாவிடமிருந்து பரஸ்பர விகாரத்து பெற ரமலத் ஒப்புக் கொண்டுவிட்டார். இதற்காக அவருக்கு ரூ.30 கோடி ரொக்கப் பணம் மற்றும் அசையா சொத்துக்களை நஷ்ட்ட ஈடாக பிரபுதேவா கொடுக்கிறார்.

இதுதொடர்பாக பிரபுதேவாவும், ரமலத்தும் நேற்று குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்து, தாங்கள் இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருகிறோம் என்று மது தாக்கல் செய்த்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

"பெரியவர்கள் கூறிய அறிவுரையின்படி இருவரும் பரஸ்பரமாக இந்த மனுவை தாக்கல் செய்கிறோம். இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து கோருவதால் ரம்லத், பிரபுதேவா இடையே சொத்து பிரிவினைக்கு சம்மதிக்கப்படுகிறது.

அதன்படி, ரம்லத்துக்கு 2 இனோவா கார்கள், அண்ணா நகரில் உள்ள 3440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து 1000 சதுர அடி நிலம் ஆகியவற்றை விற்பனை ஒப்பந்தம் செய்து தர வேண்டும்.

மேலும், ரம்லத்துக்கு ரூ.5 லட்சத்தை பிப்ரவரி மாத முடிவுக்குள்ளும், மேலும் ரூ.5 லட்சத்தை விவாகரத்து கிடைக்கும் நேரத்திலும் தர வேண்டும்.

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டை அவர்களின் இரு மகன்களுக்கு தர வேண்டும். அந்த சொத்துக்களின் மீது இருவரும் பாதுகாவலராக இருக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தை குழந்தைகள் பெரியவர்களாக வரும்வரை இருவரும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அவர்களின் உயர்கல்வி முடியும்வரை பிரபுதேவா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலம் கொண்டாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டை இரு குழந்தைகளின் பெயருக்கு எழுதித் தரவேண்டும்.

இதற்கு இருவரும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்."

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்தார்.


***********************************************************************************************************************
அம்மா பக்கம் சாயும் - வனிதா


இது நடிகர் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் இடையில் நடக்கும் போர் இனி கிடையாது. இதை மறைமுகமாக கூறியுள்ளேன்.  இதில், சட்டம் ஒழுங்கு, பொது நலம் தொடர்பான அமைச்சகங்களுக்கும், ஆளும் தமிழக அரசிற்கும் தொடர்பு உள்ளது. தமிழக அரசின் கீழ் தான், சட்டம் ஒழுங்கு தொடர்பான அனைத்தும் வருகிறது.  மதுரவாயல் போலீசில் நான் ஒரு புகார் அளித்தேன்.  சட்டப்படி, கண்ணை மூடிக் கொள்ளாமல் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. இரண்டு வாரங்கள் கழித்து விஜயகுமார் கொடுத்த பொய் புகாரின் மீது, மேல் மட்டத்தில் இருந்து வந்த பிரஷர் காரணமாக எனது கணவரை கைது செய்தனர். குடும்ப பிரச்னையில் இவர்கள் ஏன் சம்பந்தப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

என் மகனை குழப்பியுள்ளனர். இவர்களால், என் குழந்தையின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண், இரண்டு மாதங்களாக போராடி வரும்போது யாரும் ஆதரவளிக்கவில்லை.  விஜயகுமாரும் – மஞ்சுளாவும் தங்களுக்கு பொலிடிக்கல் பவர் உள்ளதாகவும், ஆளும் அரசின் ஆதரவு உள்ளதாகவும் கூறுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு இன்று இல்லை. தற்போதுள்ள அரசில் பல பெண்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். சக நடிகர்கள், அரசியல் கட்சிகளில் சேர்ந்து பேட்டி கொடுக்கின்றனர். அவர்கள் யாரும் எனக்கு உதவவில்லை.  நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தால் இந்த அநியாயம் நடந்திருக்காது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போது ஆட்சியில் இருந்திருந்தால், 100 சதவீதம் எனக்கு உதவி செய்திருப்பார்.


நான் தனியாக பெண்களுக்கென்று தன்னார்வ தொண்டு நிறுவனம் துவங்க உள்ளேன். அரசியலில் சேர ஆசைப்படுகிறேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன். ஓட்டு போடும் போது பார்த்து போடுங்கள்; ஏமாறாதீர்கள்.
இவ்வாறு வனிதா கூறினார்.


நடிகை வனிதா தனது பேட்டியில், தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருப்பதுடன், ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் தனக்கு 100 சதவீதம் உதவியிருப்பார் என்று கூறியிருக்கிறார். எனவே அவர் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

*********************************************************************************************************************** இந்தியில் நடிக்க அனுஷ்கா மறுப்பு  

இந்தி படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார். சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் ‘சிங்கம்’. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக அனுஷ்காவை கேட்டார் ரோஹித். ஆனால், மறுத்துவிட்டார். இதுபற்றி அனுஷ்கா தரப்பில் கேட்டபோது, ‘தென்னி ந்திய சினிமாவில் பிசியாக இருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது. பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னையும் உள்ளது. இதனால் ரோஹித்திடம் நட்பாக சொல்லி மறுத்துவிட்டார்’ என்றனர். 

***********************************************************************************************************************
 ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பேன்!


தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா. அவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது ஹிட்டாகிறது. அப்படியிருந்தும் யுவனுக்கு நிறைவேறாத ஆசை இருக்கிறது. இதுபற்றி அவர் 
கூறுகையில், 'சரித்திர கால படத்துக்கு இசை அமைத்து புகழ் பெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை' என்றார். மேலும் ஹாலிவுட் படத்திலும் இசை அமைக்க விரும்புவதாக கூறிய யுவன் அடுத்த ஆண்டில் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பேன், அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கூறினார் 

***********************************************************************************************************************
 பிறந்த நாளில் - மங்காத்தா வானம்


அல்டிமேட் ஸ்டார் அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்தகட்ட படிப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. தற்போது ஐதராபாத்தில்  ஷூட்டிங் முடிந்தே பிறகே மீண்டும் சென்னையில் ஷூட்டிங் நடக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் மங்காத்தா படத்தை தல பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதே போல் தல அஜீத்தின் ரசிகனாக இருக்கும் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் 'வானம்' திரைப்படத்தை அதன் இயக்குனர் க்ரிஷ் சிம்பு பிறந்தநாள் (பிப்ரவரி 3ந் தேதி) அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். 

***********************************************************************************************************************

தெலுங்கிலும் டப் ஆகிறது நடுநிசி நாய்கள்


பொதுவாக கௌதம் மேனன், ஷங்கர், செல்வராகவன் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஷங்கரின் அந்நியன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூலை தந்தது. தற்போது கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள 'நடுநிசி நாய்கள்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

க்ரைம் ஸ்டோரியான இக்கதைக்கு பின்னணி இசை ஏதும் இல்லை. இதனையடுத்து தெலுங்கில் தன்னுடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் சமீரா ரெட்டி நடித்துள்ள 'நடுநிசி நாய்கள்" படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார் கௌதம் மேனன். 

***********************************************************************************************************************
 மீண்டும் தமிழில் ஏமி

மதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கொஞ்சும் தமிழ் பேசிய இந்த வெள்ளைக்கார குயில், மதராசபட்டனம் முடிந்த கையோடு சொந்த நாட்டுக்கு புறப்பட்டபோது, எனக்கு சென்னையை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே செட்டிலாக தயாரகக இருக்கிறேன், என்று கூறி விட்டுச் சென்றார். அவரது ஆசை கூடிய சீக்கிரமே நிறைவேறிவிடும் போலிருக்கிறது.

டைரக்டர் கிரீடம் விஜய் தேடிக் கண்டுபிடித்த முத்து, விரைவில் டைரக்டர் கவுதம் மேனன் மூலம் ஒய்யாரமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மூட்டை முடிச்சுகளுடன் குடியேறப்போகிறது. ஆம்! கவுதம் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி ஏமி ஜாக்சன்தானாம். தமிழ் சினிமா வாய்ப்பு என்றதும் டபுள் ஓ.‌கே. சொன்ன ஏமி, எப்ப சென்னை வரணும் என்று கேட்டிருக்கிறார். விரைவில் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். ஏமியை மீண்டும் திரையில் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்பு கைகூடி வரும். 

***********************************************************************************************************************
படத்தை எடுத்தால் மட்டும் போதாது : ஜனநாதன்


புதுமுகங்கள் சேகர், காயத்ரி நடிக்கும் படம் ‘ஆசைப்படுகிறேன்’. இதன் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டைரக்டர் ஜனநாதன் பேசியது: இதில் நடிக்கும் ஹீரோயின் காயத்ரி விளையாட்டு வீரர். உடற்தகுதியுடன் இருக்கிறார். ஹீரோயினுக்கு ஆரோக்கியம்தான் அழகு. படத்தின் முதல் காப்பி எடுத்து விநியோகஸ்தர், தியேட்டர்காரர்களிடம் கொடுத்துவிட்டால் அதை ஓடவைத்துவிடுவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது. அப்போது 100 நாள், ஒரு வருடம், 5 வருடம் என படங்கள் ஓடின.

அன்று வேறு பொழுதுபோக்கும் இல்லை. இப்போது ஏராளமான வசதிகள் இருக்கிறது. படம் வெளியான பிறகும் வெற்றிக்கான முயற்சிகள் தொடர வேண்டும். மிகச் சிறந்த படங்கள் கூட ஓபனிங் இல்லாமல் டல்லடிக்கிறது. முதல்காட்சிக்கு 20 பேர் வருகிற நிலை இருக்கிறது. அவர்கள் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் பிறகு கூட்டம் வருகிறது. அதற்குள் படத்தை எடுத்துவிடுகிறார்கள். இந்நிலையை மாற்றும் பொறுப்பு நட்சத்திரங்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. ‘ஆசைப்படுகிறேன்’ பட இயக்குனர் பாலு மணிவண்ணன் ‘தூரத்து இடிமுழக்கம்’ காலத்திலிருந்து உதவியாளராக இருக்கிறார். ‘பாரதி’, ‘பெரியார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். நல்ல சினிமா தரும் நோக்கில் இதை இயக்கி இருக்கிறார்.

அட்டகாசம் - வாரம் ஒரு தகவல்


“அட்டகாசமா இருக்கீங்க சார்..!”

“ஹி!”

“அதுக்குக் காரணம் நீங்க போட்டிருக்கிற இந்தக் கோட்டும் சூட்டும்தான்!”
 
“ஒரு ரோஜாப் பூவை வாங்கி நெஞ்சிலே குத்திக்கிட்டேன்னா இன்னும் பிரமாதமா இருக்கும்..!”
 
“பூவை சட்டையிலே வச்சிக்கிற பழக்கம் எப்படி வந்தது தெரியுமா..?”
 
“தெரியாதே...”
 
“விக்டோரியா ராணியை மணந்து கொண்ட ஆல்பர்ட் முதல் தடவையா பிரிட்டனுக்கு வந்தார். அப்போ ராணி அவருக்கு ஒரு பூச்செண்டைக் கொடுத்து வரவேற்றார். ஆல்பர்ட் அது‌லேயிருந்து ஒரு பூவை எடுத்துத் தன்னுடைய கோட்டு கால‌ர் மடிப்பில் ஒரு துளையிட்டு அதுலே செருகிக் கிட்டார். அவ்வளவுதான்... எல்லோரும் அப்படி வச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். அதுக்கப்புறம் தையல்காரர்க‌ளே கோட்டுத் தைக்கிறப்போ ‌அதுலே ஒரு துளைவச்சிக் கொடுத்துடறது வழக்கமாகப் போச்சு..!”
 
“இந்தக் கோட்டைத் தைச்சவரும் ஒரு துளை வச்சித்தான் தச்சிருக்கார்..!”
 
“அவருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவிக்கணும்னு ஆசைப்படறேன்..!”
 
“அப்படியா...?”
 
“ஆமாம்... அதுக்கு நீங்க ஓர் உதவி செய்யமுடியுமா?”
 
“என்ன செய்யணும்ங்கறீங்க?”
 
“இந்த கோட்டைத் தைச்சவர் அட்ரஸ் எனக்கு வேணும்..!”
 
“அவரோட அட்ரஸை நான் உங்களுக்குத் தருவேன்... ஆனா நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும்..!”
 
“என்ன செய்யணும் சொல்லுங்க?”

“என்னோட அட்ரஸை நீங்க அவர்கிட்டே சொல்லிடப்புடாது..!”

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

24 December, 2010

நிஜங்கள்..


வெயில் தனிந்த ஒரு
‌கோடைக்கால இரவு...!

யிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம் 
மூச்சை நிறுத்திக் கொண்டது..

வீடெல்லாம் இருட்டு...
வீதியெல்லாம் கருமை...

நிஜம் தந்த இருட்டை யாவரும்
விளக்கு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர்...

தோ... இருட்டில் தான்
மு‌ழுமையாய் முகம் காட்டுகிறது
பிரபஞ்சம்...

விளக்குகள் இல்லாத இரவில்
விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..

சும்மரங்கள் பூக்களையும்சேர்த்து
வண்ணங்களை இழந்து காட்சி அளிக்கிறது..

தென்னையும் பனையும் 
விண்வெளியில் வரைந்த  ஓவியங்களாய்..

ஜாதிகளையும்.. மதங்களையும்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..

வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
இருட்டு ஒன்றினைக்கிறது..

தாம் ஏவாளுக்கு பிறகு
அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...

லலோரும் விளக்கைத் தேடுகிறார்கள்
வெளிச்சம் பெற..
நான் இருட்டைத் தேடுகிறேன்
மோட்சம் பெற...

ண்ணெய் குடித்து
உயிர் துடிக்கிறது விளக்கு...

ற்போது
போலிகளாயின நிஜங்கள்...

வாழ்க்கை ரகசியம்...


வாழ்க்கையில் பொறுமையும், பெருந்தன்மையும் மிக மிக அவசியம் உலகத்து மதங்களின் ‌மேலான கருத்து அதுவே ஆகும்... உலகில் யார் அதிகமாக பேசுகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் அறைகுறைகளாகத்தான் இருப்பார்கள் தெரியாத விஷயங்களை கூட தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டு இந்த உலகில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு அறிஞன் கூறினான் “நோட்டுகள் என்னவோ அமைதியாய் இருக்கும், சில்லறைகளே சத்தம் போடும்”... என்று
 

வாழ்க்கையில் தத்துவம் அமைதிகாப்பதிலேதான் இருக்கிறது... தெரிந்த விஷயங்களை கூட ஆணவம் கொள்ளமல் அமைதிகாப்பது உலகின் வெற்றிக்கான வழிகளில் ஒன்று...

அது குறித்த ஒரு ஜென் தத்துவம் :


ஒரு ஜென் துறவி இருந்தார் மல்யுத்தத்தில் கை தேர்ந்தவர்.

அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர். யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார். தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது.

இந்தக் கோபக்காரருக்கு நம்முடைய ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை. ‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லாரும் அவர் கால்ல போய் விழறீங்களே!’ என்று ஆதங்கப்பட்டார்.

அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதைப் பார்த்துக் கடுப்பான கோபக்காரர் துறவி வீட்டு வாசலில் போய் நின்றார். ‘நீ தைரியமான ஆளா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடு!’ என்று தொடை தட்டினார்.

துறவி மெல்லப் புன்னகை செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது. ‘குருஜி, நீங்கதான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்க!’ என்று அவரைத் தூண்டினார்கள்.

அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்குக் கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.

இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’ 
“பொருத்தாரே பூமி ஆள்வார்”  என்று உரைக்கிறது நம் செம்மொழி

ஆகையால் நம் நீண்ட வாழ்க்கை சில ஆண்டுகளுக்குள் வாழ்ந்து முடித்து விடுவதல்ல... இதை ஆயுளுக்கும் தொடர  நாம் படிப்பினைகளை ஆய்ந்தாக வேண்டும்... அனைத்தும் அறிந்துக் கொண்டு ‌அமைதி கொள்வோம் அப்போதுதான்  மலைப்போல் எழுவோம்.. இதுவே வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்..
 
 எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

அன்புடன்..
சௌந்தர்...

23 December, 2010

பத்துக்கு பத்து - தமிழ் சினிமா இந்தவாரம் (டிசம் 20-25)

ஜப்பானில் எந்திரன் :

முத்து திரைப்படம் சர்வதேச அளவில் சாதனைப் படைத்த முதல் இந்தியப் படமாகும். டான்சிங் மகாராஜா எனும் பெயரில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனைப் படைத்தது. இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட் உள்ளதை நிரூபித்து, புதிய வர்த்தகத்தைக் காட்டிய படம் முத்து. ரஜினியின் நடனமும், ரஹ்மானின் இசையும் சர்வதேச மக்களையும் ஆட்டி வைத்தன.

அடுத்த படமான எந்திரன், ரஜினியை இந்திய சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்துக்குக் கொண்டுபோனது. ரூ 380 கோடி வரை வசூலைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 

**********************************************************************************

சிறுத்தை - கண்டிப்பா சீறும்!

கோலிவுட்டில் தற்போது பறப்பது சூர்யா-கார்த்தியின் சகோதரர்கள் கொடிதான். இவர்களின் படம் என்றால் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வரிந்துகட்டி நிற்கிறார்களாம் வாங்க. சூர்யாவின் 'சிங்கம்' வசூலில் செய்த சாதனையை கார்த்தியின் 'சிறுத்தை' விஞ்சும் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பதால் படத்திற்கு இப்போதே ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது.

இதை உறுதிபடுத்தியிருக்கிறது அண்மையில் நடைபெற்ற 'சிறுத்தை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. விழாவில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும், டிரைலரும் வந்திருந்த கார்த்தியின் ரசிகர்களை மட்டுமல்லாது வினியோகஸ்தர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறது.

ஒரு பக்கம் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியில் கலக்கியிருக்கும் கார்த்தி, மறுபக்கம் காரசாரமான போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். எப்போதும் ஜாலியான கேரக்டரில் நடித்த கார்த்தி எப்படி கம்பீரமான போலீஸாக நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய முகத்திலும் தெரிய "கார்த்தி தன்னோட செல்போன்ல இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்ல நடிச்ச ரவி தேஜா படத்தை வச்சிருப்பாரு. இப்படி ஒரு டெடிக்கேஷனை நான் யாருகிட்டயும் பார்த்ததில்லை. அப்போதே எனக்கு தெரிந்தது இந்த கேரக்டர்ல கார்த்தி கலக்கியிருப்பாருன்னு, அதை டிரைலர் உறுதிபடுத்தியிருக்கு" என்று பேசி தெளிவுபடுத்தினார் இயக்குநர் லிங்குசாமி.

இந்த படத்தின் கடைசி பாடலுக்காக ரொம்பவும் மெனக்கெட்டாராம் இயக்குநர் சிவா. "இன்னும்..இன்னும்.."என்று சொல்லி 25 பாடல்களை உருவாக்கி அதில் ஒன்றை தேர்வு செய்தாராம். வேறு எந்த படத்திற்கும் ஒரு பாடலுக்காக இத்தனை பாடல்கள் போட்டதில்லையாம் வித்தியாசாக
ர்.

*********************************************************************************

காதலில் விழுந்தேன் - அனுஷ்கா


பெரும்பாலான நடிகைகள் தாங்கள் காதலிப்பதை ஒப்புக்கொண்டதே இல்லை. ஆனால் இவர்களில் சற்று வித்தியாசமானவர் நடிகை அனுஷ்கா. எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசும் அனுஷ்கா, தான் ஒருவரை காதலிப்பதாக ஒப்புகொண்டுள்ளார்.
இரண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா, அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அனுஷ்கா.
இந்நிலையில் தனியார் டி.வி. ஒன்றில் பேட்டியளித்த அனுஷ்கா, என்னுடன் நடித்த பல ஹீரோக்களுடன், என்னையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள், அவையாவும் வதந்திதான்.

ஆனால் நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவரும் என்னை அதிகமாக காதலித்து வருகிறார். அவர் யார் என்று இப்போது கூற முடியாது. அவர் பெயரை சொன்னால் பலரும் தங்களது புருவத்தை உயர்த்துவார்கள், இதனால் அவர் பேரை சொல்ல விரும்பவில்லை. தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.

படங்கள் அனைத்தையும் முடித்த பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
**********************************************************************************

காதலிக்க நான் ரெடி - பாவனா

மலையாள திரையுலகில் இப்போது ஹாட் நியூஸ் பாவனா தான். இதற்கு காரணம், தான் ஒரு இளம் நடிகரை காதலிப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா, வெயில், தீபாவளி, கூடல்நகர், ராமேஸ்வரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தை சேர்ந்த பாவனா தமிழை காட்டிலும் மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ளார்.

இதனிடையே இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், வீட்டில் அவருக்கு மாப்பிளை தேடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நி‌லையில் தான் ஒரு இளம் நடிகரை காதலிப்பதாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாவனா கூறுகையில், நான் காதலிக்கவில்லை என்று ஒரு போதும் பொய் சொல்ல மாட்டேன். அதேசமயம் எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடியபோகிறது என்று நினைக்கவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒற்றுமை இருக்கிறது. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, இரண்டு வருடங்கள் கழித்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதுவரை நடிப்பில் முழுகவனம் செலுத்துவேன் என்றார்.

கடைசிவரை அந்த நபர் யார் என்று கூறமறுத்துவிட்டார். இருப்பினும் அவர் மலையாளத்தை சேர்ந்தவர் அல்ல, என்று மட்டும் தகவல் தெரிவித்தார்.

***********************************************************************************

நாங்களும் கிரிக்கெட்   ஆடுவோம்ல..

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிகிய மொழித் திரை நட்சத்திரங்கள் பங்குப்பெறும் கிரிக்கெட் போட்டி வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது.

'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்'(CCL) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டி ரஜினிகாந்த் உட்பட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.

இந்த அமைப்பின் அறிமுக விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ் நட்சத்திர அணியை நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்.

ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான கோலிவுட் அணியில் ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி, சிம்பு, அப்பாஸ், ஷாம், ஜெய், ரமணா, அம்சவர்தன், விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். மேலும் அணியின் ஐகான் வீரர்களாக சூர்யாவும், விஜயும் இருப்பார்கள். இதில் சூர்யா ஐகான் வீரராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

20 ஓவர் கொண்ட இந்த போட்டியின் இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.25 லட்சம் பரிசு அளிக்கப்படும். இதை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த இருக்கிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், இந்தி, போன்ற அணிகளுக்கு பல கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். அதே போல கோலிவுட் அணிக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது
 

***********************************************************************************

அமலா பால்  விலகல்



ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்திலிருந்து நாயகி அமலா பால் மற்றும் ஹீரோ விமல் இருவருமே விலகிவிட்டனர்.

ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஆர் முருகதாஸ் ஒரு படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரிடம் உதவியாளராக இருந்த சரவணன் இயக்குகிறார்.


இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தில் நடிக்க ஜெய், அஞ்சலி, களவாணி படத்தில் நடித்த விமல், மைனா புகழ் அமலா பால் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். டிசம்பர் 15-ம் தேதி படப்பிடிப்பும் ஆரம்பித்த நிலையில், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர் அமலாவும் விமலும். ஜெய் - அஞ்சலிக்கு அடுத்த நிலையில் நடிக்க விரும்பாததால் விலகுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.


இப்போது விமலுக்குப் பதில் தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமலாவுக்குப் பதில் வேறு நாயகியைத் தேடி வருகின்றனர்.


அதே நேரம், இந்தப் படத்திலிருந்து கழன்று கொண்ட அமலாவும் விமலும், பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ் படத்தில் நாயகன் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளனர்.


இந்த வாய்ப்புக்காகவே, முருகதாஸ் படத்தை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.


**********************************************************************************   
சிக்கலோ சிக்கல் - குழப்பத்தில் காவலன்

நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ் படம் வெற்றியை தந்தது. அதனால் அப்படத்தின் இயக்குநர் சித்திக்குடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்தார் விஜய். மலையாளத்தில் வெளிவந்த பாடிகாட் என்ற படத்தையே தமிழில் இயக்குவது என்று முடிவானது. மலையாளத்தில் இயக்கியவரும் சித்திக்தான்.

சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த காவல்காரன் படத்தின் டைட்டில் இந்தப்படத்திற்கு வைக்கப்பட்டது. என் அனுமதி இல்லாமல் எப்படி இந்த டைட்டிலை பயன்படுத்தலாம் என்று கண்டனம் தெரிவித்ததோடு இந்த டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துவிட்டார் ஆர்.எம்.வீரப்பன்.

இதையடுத்து காவல் காதல் என்று மாறி பின்பு காவலன் என்று பெயர்மாற்றப்பட்டது.

மலையாளத்தில் வெளியான பாடிகாட் கதையின் உரிமை கோகுலம் நிறுவனம் வாங்கி வைத்துள்ளது. இதே கதையை கொஞ்சமும் மாறாமல் எப்படி தமிழில் எடுக்கலாம் என்று கோகுலம் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் காவலன் படத்திற்கு தடைகோரியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோகுலம் நிறுவனத்திற்கு 1.80 கோடியை வழங்கிவிட்டு காவலன் படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டார்.

தியேட்டர் அதிபர்கள் விஜய் நடித்து ஏற்கனவே வெளிவந்த படங்களுக்கான நஷ்ட ஈட்டை கொடுத்தால்தான் படத்தை திரையிடுவோம் என்று கொடி பிடித்துள்ளனர். அந்த சிக்கலில் இருந்தே விஜய் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இந்த புதிய சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகர் விஜய்.


**********************************************************************************
 எப்போ கிளைமேக்ஸ் தெரியல..


நடிகர் ஆகாஷ்க்கும், வனிதாவுக்கும் பிறந்த மூத்த மகன் விஜய்ஸ்ரீஹரியை, வனிதாவிடம் இருவாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் அவரது மகள் நடிகை வனிதா இடையே சமீபத்தில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வனிதாவிடம் இருந்த மகன் விஜய்ஸ்ரீஹரியை அவரது முன்னாள் கணவர் ஆகாஷ் அழைத்துச் சென்றார். ஆகாஷிடம் உள்ள மகனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் விஜய்ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து ஆகாஷ், விஜய்ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவர் தாக்கல் செய்த மனுவில், வனிதா - விஜயகுமார் இடையே ஏற்பட்ட சண்டையால் விஜய்ஸ்ரீ ஹரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் அவன் என்னுடன் வாழ விரும்புகிறான். வனிதாவுடன் வசிக்கும் ஆனந்தராஜ் விஜய்ஸ்ரீஹரியை கேவலமாக நடத்துகிறார். இதனால் அவன் பெரியவனாகும் வரை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு கூறினார்கள். அவர்கள் கூறும் போது, முன்னாள் கணவர் ஆகாஷ் இரண்டு வாரத்தில் விஜய்ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அவன் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்
 

 ********************************************************************************** 
அம்மா சென்டிமென்ட்

"தென்மேற்குப் பருவக்காற்று" இன்னும் இரண்டு நாட்களில் வெளிவர இருக்கும் இப்படம், தாய்மையின் பெருமையை பேசும் படமாகவும், காதலின் கண்ணியம் பேசும் படமாகவும் வெளிவர இருக்கிறது.

இது தாயை போற்றும் தனயனை பற்றிய கதை அல்ல... தனயனை தாய் காப்பாற்றும் கதை என்பதால் ஹீரோயிசத்தையே விரும்பும் நம் ஹீரோக்களில் பலர் இந்த கதையை கேட்டுவிட்டு நடிக்க மறுத்துவிட்டனர். அதனால் விஜய் சேதுபதி எனும் கூத்துப்பட்டறை கலைஞரை கதாநாயகராகவும், அவரது ஜோடியாக வசுந்தரா சியேட்ரா நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இப்படத்தின் நாயகன், நாயகி என்றாலும் சரண்யா, பொன் வண்ணன் தான் இப்பட கதையின் நாயகி என்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

என்.ஆர்.ரஹ்நந்தன் இசையில் தாய்மையையும், தாயையும் பற்றியும் கூறும் பாடல்கள் இப்பொழுதே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அருள்தாஸ் ஒளிப்பதிவில், க்ளோபல் இன்ஃபோடெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக எஸ்.மைக்கேல் ராயப்பன் வழங்கும் இப்படத்தை, ஜோதம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் மிலிட்டரி கேப்டன் ஷிபு ஐசக் தயாரிக்கிறார்.

நாடோடிகள் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கி வெளியிட காரணம் தாய்மையை போற்றும் "தென்மேற்குப் பருவக்காற்று" படத்தின் கதையும், காட்சிகளும் தன் தாயை ஞாபகப்படுத்தியது தானாம். இதுமாதிரி படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரது தாயும் ஞாபகத்திற்கு வருவார்! என அடித்து கூறுகிறார் இந்த தயாரிப்பாளர்! 


***********************************************************************************
சீமான் படத்தில் விஜய்..!


தம்பி படத்தை அடுத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார் சீமான். கடந்த ஓராண்டு காலமாகவே சூடான பேச்சு நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கை என அலையும் சீமான். என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி எனக் கூறியுள்ளார். .இதுகுறித்து இயக்குநர் சீமான், 

‘’நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்’’என்று தெரிவித்துள்ளார்.தயாரிப்பாளர் தாணு, ‘’சச்சின் படத்திற்கு பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தப்படத்திற்கு பகலவன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். 

நண்பர்களே இந்த பகுதியை தொடர வாக்களியுங்கள் 

மன்மதன் அம்பு - விமர்சனம் (First in Net)

ரெட் ஜெயின் ட் மூவிஸ் சார்பாக வெளிவந்துள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் விமர்சனம் 
கவிதை வீதி-யிருந்து முதலாவதாக...

படத்தலைப்பு 
   முதலில் படத்தின் தலைப்பு படத்தின் நாயகர் கமலஹாசனின் பெயர் மேஜர் R. மன்னார் என்பதின் சுருக்கமாக மன் என்பதையும், தொழிலதியராக நடித்த மாதவனின் பெயர் மதனகோபால் என்பதில் மதன் என்பதையும், நடிகை நிஷா-வாக வரும் திரிஷா வின் சொந்தபெயரான அம்புஜா என்பதின் சுருக்கமாக அம்பு என்பதை எடுத்து படத்திற்கு மன்மதன்அம்பு என்று பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் கதையும் இந்த மூவரைச்சுற்றியே நகர்ந்திருக்கிறது...

கதைச்சுருக்ககம் :
படத்தில் நடிகையாக வரும் திரிஷாவுக்கும் தொழிலதிபர் மாதவனுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது நடிகை என்பதால் மாதவனின் தாயார் திரிஷாவை சந்தேகப்பட அந்‌த சந்தேகம் மாதவனிடமும் தொற்றிக் கொள்கிறது. கொடைக்கானலில் காரில் ஏற்படும் வாக்குவாதம் இவர்களை பிரியும் அளவுக்கு எற்படுகிறது. அப்போது திரிஷா ஒரு காரை இடித்து தள்ளி தடுமாறி நிற்கிறார். அந்த நிகழ்வுக்கு பின் 3 ஆண்டுகள் கழித்து கதை ஆரம்பிக்கிறது.

திரிஷா விடுமுறையை கழிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சு்றறுலா செல்கிறார். அங்கு அவருடைய தோழியான சங்கீதா படம் முழுக்க தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வருகிறார்.

அங்கு தான் கமலின் என்ட்ரி சுற்றுலா வந்த திரிஷாவை கண்காணிக்க மாதவன்,  ஓய்வு ‌பெற்ற ‌ராணுவ மேஜரான கமலை நியமிக்கிறார். கமல் தன்னுடைய நண்பரான ரமேஷ் அரவிந்-க்கு நடக்க இருக்கும் ஒரு ஆபரேஷனுக்காக இந்த வேலையை ஒப்புக் கொள்கிறார். ஆரம்பத்தில் திரிஷாவை பற்றி நல்ல சர்டிபிகேட் தரும் கமலுக்கு மாதவன் பணம் கொடுக்க தயக்கம் காட்ட நண்பரின் ஆபரேஷனுக்காக திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உண்டு என்று பொய் சொல்லி தன்னையே அந்த கதாபாத்திரத்தில் இணைத்து கொள்கிறார்.


அதன் பிறகு திரிஷா, சங்கீதாவுடன் பாரீலிருந்து வெனிஸ் செல்லும் ஒரு ஆடம்பரக்கப்பலில் (MSC) சுற்றிவர கதை விருவிருப்படைகிறது.
இதற்கிடையில் கமலின் மனைவி எப்படி இறந்தாள் என திரிஷ் கேட்க கோடைக்கானலில் நடந்த கார்விபத்தை சொல்ல அந்த விபத்தை தான் தான் செய்ததது என குற்றஉணர்வில் தவிக்க.. பிறகு மாதவனிடம் திரிஷா இணைக்க அனைவரும் பாடுபட என பயணப்படுகிறது கதை...

கடைசியில் மாதவன்-திரிஷா இணைந்தார்களா கமல் என்னஆனார் என கடைசி அரைமணிநேர படம் விளக்குகிறது...

படத்தைப்பற்றி...
 

கமல் தன்னுடைய கதை, திரைக்கதை வசனப் பணியோடு நடிப்பு என அனைத்து இடங்களிலும் ஜொலிக்கிறார்..

திரிஷாரவை பின் தொடரும் போதும்... பிறகு திரிஷா வுடன் இணைந்து கப்பலில் பயணனிக்கும் போதும் தனியாக தெரிகிறார். தன் மனைவி விபத்தில் இறந்ததை சொல்லும் போதும்.. நண்பரின் ஆபரேஷனுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவிக்கும் போதும் பளிச் கண்கலங்க வைக்கிறார். 

மாதவனுக்கு அதிக வேலை இல்லை திரிஷாவை சந்தேகப்படும் ஒரு காதலனாக எப்போதும் தண்ணில் இருந்துக் கொண்டு கமல் திரிஷா இவர்களோடு ‌செல்போனில் பேசுவதோடு அவர் வேலை முடிகிறது.. பின்னர் இறுதி காட்சியில் வெனிஸ் நகரில் இவர்களுடன் இணைந்து இவர் செய்யும் காமடி செம இழுவை...


உயிர் சங்கீதா திரிஷா வின் தோழியாக இரண்டு குழந்தையுடன் வந்து கதையோடு ஒன்றி போயிருக்கிறார் (ஆண்களை செம கமண்ட் அடிக்கிறார்)
 
ஊர்வசி-ரமேஷ் அரவிந்த் ஜோடி மருத்துவமனையோடு இவர்கள் பணி முடிந்து விடுகிறது... ரமேஷ் அரவிந்த் மொட்டை தலையுடன் படுக்கையோடு இருந்துவிடுகிறார்...

தேவி ஸ்ரீபிரசாத் பிண்ணனி இசை நன்றாக வந்துள்ளது.. தகிடதத்தோம் பாடல் முனுமுனுக்க ‌வைக்கிறது..
கமல் தன்னுடைய மனைவியுன் காட்டும் போது... விபத்தில் இறந்திலிருந்து தலைகீழாய் காட்சி பயணப்பட்டு சந்தித்த இடத்தில் முடிகிறது..(ரீ-வைண்ட் செய்தது போல்) அந் காட்சியோடு வரும் பாடலும் இசையும் பிரமாதம்... தமிழ் சினிமாவுக்கு இது புது முயற்சி..


மற்றபடி ஐரோப்பிய நாடுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் கே.எஸ். ரவிக்குமார்.
 

ஆரம்ப காட்சியில் ந‌டிகை திரிஷாவுடக்-சூர்யா ஆடும் டான்ஸ் பிரமாதம்..
அதுக்கு டைரக்டர் ‌கே.எஸ் தான்..
 

ஆனால் படம் பார்ப்பவர்களை அதிர்ச்சி ஊட்டும் வகையில்  க்ளைமாக்ஸ் அமைந்துள்ளது அதை வெண்திரையில் பாருங்கள்..
(தயவுசெய்து DVD பார்க்க வேண்டாம்)
கதை, திரைக்கதை, வசனம் கமல் என்பதால் அதிகவசனம், காமெடி கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் கடினமாயிருக்கிறது.





நடிப்பு : கமலஹாசன், மாதவன், 
திரிஷா, ரமேஷ் அரவிந்து, சங்கீதா, ஊர்வசி, மற்றும் பலர்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
 

தயாரிப்பு : உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ்
 

பாடல்கள் : கமலஹாசன் (5 பாடல்) வி‌‌வேகா (1 பாடல்)
 

கதை, திரைக்கதை, வசனம் : கமலஹாசன்
இயக்கம் : ‌கே.எஸ். ரவிக்குமார்


மொத்தத்தில்  மன்மதன் அம்பு காமம் இல்லாமல்

20 December, 2010

சமையல் ரகசியம்.... (வாரம் ஒரு தகவல்)


“வீட்டு‌லே மனைவி தொந்தரவு தாங்க முடியலே சார்!”

“மிக்சி ஒண்ணு வேணுமாம்....ஒரே பிடிவாதம்..!”
 

“‌அது தேவைதானே... வாங்கிக் கொடுங்க!”
 

“‌பேசாமே தென்கொரியாவுலே பொறந்திருக்கலாம்.”

“என்ன சொல்றீங்க?”


“அங்கே கியூன்னியா-ங்கறது ஒரு மலைப்பகுதி... கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரம்... அங்கே இருக்கிறது. நூறு குடும்பம்... அந்த ஊர்லே அடுப்பே பத்த வைக்கிறதில்லையாம்!”
 

“அப்படினான...?”
 
“அங்கே சமையலே கிடையாது... பச்சையாவே சாப்பிடராங்க.. பச்சை காய்கறிகள்... கீரைகள்... பழங்கள்... இதுதான் ஆகாரம். மூணு வேளையும் இதுதான் சாப்பாடு... எந்த வீட்டுலேயும் அடுப்பே கிடையாது...!”
 

“ஆச்சரியமாத்தான் இருக்கு..!”
 
“அந்த ஊர்லே அடுப்பு கூட பத்த வைக்கிறதில்லே-ங்கறதுனாலே புகைக்கே வழியில்லே... சுத்தமான காற்றை சுவாசிக்கிறாங்க... இயற்கை தருகிறதை அப்படியே சாப்பிடறதுனாலே எந்த நோயும் வர்றதில்லே... சின்ன தலைவலி கூட யார்க்கும் வந்ததில்லையாம்... எல்லோருமே ஆரோக்கியமா வாழறாங்களாம்... 90 வயசு... 100 வயசு ஆசாமியள்லாம் அங்‌கே சர்வ சாதாரணம்..!”


“நாம கூட அப்படி சாப்பிட ஆரம்பிச்சா நல்லதுதான்..”
 

“நல்லதுதான்.. இருந்தாலும் என்னாலே அது முடியாது... மனைவியை சமாதானப்படுத்தறது ரொம்ப கஷ்டம்! மிக்சி தொந்தரவே ரொம்ப பெரிசா இருக்கு!”

“நான் உங்களை மாதிரி இல்லீங்க!”
 

“அப்படிங்களா?”
 

“என் மனைவி இது மாதிரி சமையல் சம்பந்தமா எதையும் கேட்டு ‌தொந்தரவு பண்றதுக்கு நான் இடம் கொடுக்கவே மாட்டேன்!”
 

“அதுக்கு என்ன ‌செய்வீங்க...?”
 

“நானே சமைச்சுடுவேன்...!”

 

நன்றி தென்கச்சியார்

Related Posts Plugin for WordPress, Blogger...